அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து: பாஜவில் குஷ்பு இணைந்தது அதிமுகவுக்கு வலு சேர்க்காது

மதுரை: பாஜவில் குஷ்பு இணைந்தது அதிமுகவுக்கு வலு சேர்க்காது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். அதிமுகவின் 49வது ஆண்டு விழாவையொட்டி, மதுரை தவிட்டுச்சந்தையில் அதிமுக கொடியேற்று விழா நேற்று நடந்தது.  இதில், அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியேற்றிய பிறகு அளித்த பேட்டி வருமாறு: நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்களுடைய குறிக்கோள். ஆனால், அதே நேரத்தில் மருத்துவ மாணவர்  சேர்க்கையில், அரசுப்பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில், தமிழக அரசு 7.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதில் அதிமுக உறுதியாக உள்ளது.

பிரதமர் மோடி, மாநில அரசுக்கு உதவிகளை செய்து வருகிறார். எனவே ஒருமித்த கருத்துடன் அவர்களுடன் தோழமையுடன் உள்ளோம். கட்சிப்பதவிகள் ஒருபோதும் ஏலம் விடப்படுவது இல்லை. கமல்ஹாசன் கூறுவது பொய். பாஜவில் குஷ்பு இணைந்தது அதிமுகவிற்கு வலு சேர்க்காது. கூட்டணி கட்சியால் எங்களுக்கு பலம் சேரும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>