சொல்லிட்டாங்க...

நீதிபதிகள் தங்கள் கொள்கைகளில் உறுதியுடன் இருக்க வேண்டும். அனைத்து அழுத்தங்களையும், முரண்பாடுகளையும் தாங்கிக்கொண்டு தங்களின் முடிவுகளில் அச்சமின்றி இருக்க வேண்டும்.

- உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா.

வங்கக்கடலில் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை சிங்களக் கடற்படையினர் துப்பாக்கியைக் காட்டி விரட்டியடித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

- பாமக நிறுவனர் ராமதாஸ்.

சட்டமன்ற தேர்தலில் ஜனதா தளம் வெற்றி பெற்றாலும், பெறாவிட்டாலும் நிதிஷ் குமார்தான் முதல்வராக இருப்பார். அவர்தான் பீகார் முதல்வர் என பாஜ அறிவிக்கும்.

- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

மத்திய அரசு மருத்துவப்படிப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு செய்துள்ளது வரலாற்று துரோகம்.

- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

Related Stories:

>