மாவட்ட வளர்ச்சி, கண்காணிப்புக் குழுக்கூட்டம்: டி.ஆர்.பாலு எம்பி பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு எம்பி தலைமை தாங்கி, வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். இதுகுறித்து டி.ஆர்.பாலு எம்பி கூறுகையில், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மத்திய அரசு மூலம் தொடங்கப்பட்டு, தற்போது செயல்படுத்தப்படும் ஊரக வளர்ச்சி. வருவாய், நகராட்சி, பேரூராட்சி, குடிநீர் வழங்கல், வேளாண்மை, சுகாதாரம், கல்வி, சமூக நலம், மின்சார வாரியம் ஆகிய துறைகளின் பணிகளை ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்துவதற்கும், திட்ட செயல்முறைகளை கண்காணிக்கவும், பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்ய மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக்குழு காலாண்டுக்கு ஒருமுறை கூடி, திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி இக்கூட்டம் கூட்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  மேலும், ஊரக வளர்ச்சி துறை மூலம் நடக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம். பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம். தூய்மை பாரத இயக்கம், தேசிய கிராம நகர திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் உள்பட பல்வேறு துறை பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றார். கூட்டத்தில் கலெக்டர்கள் காஞ்சி பொன்னையா, செங்கை ஜான் லூயிஸ், எம்எல்ஏக்கள் க.சுந்தர், தா.மோ.அன்பரசன், எஸ்.ஆர்.ராஜா, வக்கீல் எழிலசரன், இ.கருணாநிதி, ஆர்.டி அரசு, புகழேந்தி, வரலட்சுமி மதுசூதனன், அரவிந்த் ரமேஷ், இதயவர்மன், எம்பி செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* அண்ணா சிலைக்கு மரியாதை

திமுக பொருளாளரும், மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எம்பி நேற்று காஞ்சிபுரம் வந்தார். திமுக பொருளாளராக பொறுப்பேற்று முதன்முதலாக காஞ்சிபுரம் வந்த அவர், அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அங்குள்ள பதிவேட்டில் கையொப்பம் இட்டார்.

Related Stories:

>