×

கொரோனா விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதில், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது. கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். கடைகள், பொது இடங்களில் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுமக்களுக்கு, மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்து விதமாக காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து போலீசாரின் பைக் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இதில் விஷ்ணுகாஞ்சி, சிவகாஞ்சி, காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையங்கள், மற்றும் ஆயுதப்படை காவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Corona Awareness Rally , Corona Awareness Rally
× RELATED கொரோனா விழிப்புணர்வு பேரணி