×

சி.வி.எம்.அண்ணாமலை அறக்கட்டளை சார்பில் தனியார் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சி.வி.எம். அண்ணாமலை அறக்கட்டளை சார்பில், இளைஞர்களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. திமுக மாநில மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் எம்எல்ஏவுமான வக்கீல் எழிலரசன் தலைமை தாங்கினார். முகாம் ஒருங்கிணைப்பாளர் ராகவன் ராமு வரவேற்றார். காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம், மாவட்ட அவைத் தலைவர் சேகரன், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காணொளி வாயிலாக  முகாமை தொடங்கி வைத்தார். பிரிக்டெக் பொதுமேலாளர் மணிகண்டன், கொமாட்சு உதவி மேலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முகாம் குறித்து விளக்கவுரையாற்றினர். முகாமில் நோக்கியா, மதர்ஸ்சன், டி.வி.எஸ், சோழா, பஜாஜ், கோமாட்சு நிறுவனங்கள் உள்பட 41 நிறுவனங்களுக்கான வேலை வாய்ப்பு நேர்காணல் நடத்தியது. கூகுள்மீட் செயலி வழியாக நடந்த இம்முகாமில், 400க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர். முடிவில் மணிமேகலை நன்றி கூறினார்.

Tags : Employment Camp ,Companies ,CVM Annamalai Foundation ,Udayanithi Stalin , Employment Camp for Private Companies on behalf of CVM Annamalai Foundation: Started by Udayanithi Stalin
× RELATED தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில்...