×

ஐபிஎல் டி20 இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!!

அபுதாபி: ஐபிஎல் டி20 இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  ஐபிஎல் டி20 இன்றைய ராயல் சேலஞ்ச் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டிவ் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார்.

ஐபிஎல் டி20 போட்டியில் ராயல் சேலஞ்ச் பெங்களூரு அணிக்கு 178 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயித்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது.

இதனையடுத்து, களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் நிர்ணயித்த 178 ரன் இலக்கை 19.4 ஓவர்களில் எட்டி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய டி-வில்லியர்ஸ் 22 பந்துகளில் 55 ரன் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.


Tags : Bangalore ,Rajasthan ,match ,IPL T20 , IPL, Rajasthan team, Bangalore team, win
× RELATED ஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான...