கோதுமை ராகி அடை

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் கோதுமை மாவு, ராகி, இஞ்சி பூண்டு விழுது, சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடை மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும். சூடான தோசைக்கல் அல்லது தவாவில் அடையாகத் தட்டி கடலை எண்ணெய் ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.