கறுப்பு கடலை மசாலா புளிக்குழம்பு

எப்படிச் செய்வது?

கறுப்பு கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் வேகவைத்து எடுக்கவும். புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, சின்ன வெங்காயத்தை முழுதாக போட்டு வதக்கி, நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி, தேங்காய்த்துருவல் சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கவும். ஆறியதும் மிக்சியில் விழுதாக அரைத்தெடுக்கவும்.

அதே கடாயில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கத்தரிக்காய், முருங்கைக்காய் சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள் தூள், சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிட்டு அரைத்த விழுது, உப்பு, புளிக்கரைசல், சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும். இறுதியாக வெந்த கடலை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, கொத்தமல்லி தூவி அலங்கரித்து சூடாக சாதத்துடன் பரிமாறவும்.