மனித கால்குலேட்டர்!

நன்றி குங்குமம்

சமீபத்தில் மனக்கணக்குக்கான உலக சாம்பியன்ஷிப் (Mental Calculation World Championship at Mind Sports) போட்டி லண்டனில் நடந்தது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு நிகராக கருதப்படும் இப்போட்டியில் 13 நாடுகளைச் சேர்ந்த 30 கணித மேதைகள் கலந்துகொண்டனர். இதில் கால்குலேட்டரைவிட அதிவேகமாக மனதுக்குள் கணக்கிட்டு தங்கத்தை தட்டியிருக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த நீலகண்ட பானு பிரகாஷ். 1998ல் இருந்து நடக்கும் இப்போட்டியில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறை.

20 வயதான நீலகண்டாவின் வேகத்தைப் பார்த்து உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் என்ற பட்டத்தைக் கொடுத்திருக்கின்றனர். கணித மேதை சகுந்தலாதேவியின் சாதனையைக்கூட தகர்த்துவிட்ட நீலகண்டா, கணிதத்தில் நான்கு உலக சாதனைகளைப் படைத்து, 50 முறை லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். மாணவர்களுக்கு கணிதத்தின் மீது இருக்கும் பயத்தைப் போக்குவதே இந்த இளம் கணித மேதையின் கனவு.  

தொகுப்பு: த.சக்திவேல்

Related Stories: