×

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்படுத்தப்படவுள்ள அதிரடி மாற்றம்

ஆகயாத்தில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் காணப்படும் மலசலகூடமானது புதிய வசதிகளுடன் இவ்வருட ஆரம்பத்தில் புதிப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நவீன ரக குளிரூட்டி ஒன்றும் அங்கு பயன்படுத்தப்படவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நீண்ட நேரத்திற்கு உணவு மற்றும் குடிபானங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கக்கூடிய வகையிலான குளிரூட்டி பயன்படுத்தப்படவுள்ளது. இவ்வாறான 8 குளிரூட்டிகள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டுசெல்லப்படவுள்ளன.

இந்த நவீன ரக குளிரூட்டியானது University of Colorado ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் வழமையாக பயன்படுத்தப்படும் ரியூப்பில் அடைக்கப்பட்ட உணவுகளுக்கு பதிலான நேரடியான உணவுகளை உட்கொள்ளக்கூடிய வாய்ப்பு சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Action change ,International Space Station , Action change to be made at the International Space Station
× RELATED கமிஷனர் அலுவலகத்தில் எழுத்து...