×

இந்தியாவின் பெருமை

நன்றி குங்குமம் தோழி

ஆசியப் போட்டியில் பதக்கம் வென்ற பெண்கள்

ராஹி சர்னோபாத்.

45 நாடுகள் பங்கேற்றுள்ள 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று  அசத்தினார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். அந்த மாநிலத்தின் மாவட்டமொன்றில் துணை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து  வருகிறார். ஏற்கனவே மெக்ஸிகோவில் நடந்த உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும், காமன்வெல்த் போட்டியிலும் தங்கப்பதக்கம்  வென்ற ராஹி பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார். “ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுத்து  வெற்றி பெறுவதே நோக்கம். தொடர்ந்து அதற்கான பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன்” என்கிறார்.

திவ்யா கக்ரான்

மல்யுத்த போட்டியில் கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றார். பெண்கள் 68 கிலோ எடை பிரிவின்  இறுதிப்போட்டிவரை சென்று வெள்ளி பதக்கத்தை கைபற்றினார். “போட்டி கடுமையாக இருந்தது. தங்கப்பதக்கத்தை நோக்கியே கடுமையாக  போராடினேன். இந்தப் போட்டி நல்ல அனுபவத்தை கொடுத்தது” என்றார்.

வினேஷ் போகத்


50 கிலோ எடைப்பிரிவில்  ஜப்பானைச் சேர்ந்த ஐரி யுகியை எதிர்கொண்டார். இதில் 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம்  வென்றார். முதல் சுற்றில் 4-0 என வினேஷ் போகத் முன்னிலைப் பெற்றார். 2-வது சுற்று 2-2 என டிராவில் முடிந்தது. அதனால்  ஒட்டுமொத்தமாக 6-2 என வினேஷ் போகத் ஜப்பான் வீராங்கனை ஐரி யுகியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

- ஜெ.சதீஷ்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!