×

கொரோனாவுக்கும் வந்துவிட்டது சென்சார் கருவி!: பத்து நிமிடங்களில் கொரோனா வைரஸினைக் கண்டுபிடிக்கும் நவீன சென்சார் உருவாக்கம்.!!

கடந்த மார்ச் மாதம் முதல் உலகை உலுக்கி வந்த கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.இவ் வைரஸ் தாக்கத்தினை கண்டறிவதற்கு எடுக்கும் நேரத்திற்குள் மற்றையவர்களுக்கும் வேகமாக பரவிவிடுகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு வேகமாக கொரோனா வைரஸ் தாக்கத்தினை கண்டறிவது தொடர்பில் பல்வேறு ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெறும் 10 நிமிடங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தினை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் நவீன சென்சார் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள California Institute of Technology (Caltech) ஆராய்ச்சியாளர்களே இதனை உருவாக்கியுள்ளனர். கார்பனால் உருவாக்கப்பட்ட இந்த வயர்லெஸ் சென்சார் ஆனது இரத்தம், உமிழ்நீர் மற்றும் வியர்வை என்பவற்றில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றினை உறுதிப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.

Tags : Corona , Corona, ten minute, modern sensor development
× RELATED கொரோனா தடுப்பூசி சீரம் நிறுவனம் ரூ.52கோடி நன்கொடை..!!