×

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க செயற்குழுக் கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வட்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க செயற்குழுக் கூட்டம் காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சங்க மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. சங்கத்தின் வட்ட செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் அண்ணாமலை, மாவட்ட நிர்வாகிகள் சுப்பிரமணியம், துரை, தட்சிணாமூர்த்தி, மோகன்ராஜ், வட்ட செயலாளர் மோகன், பொருளாளர் தணிகாசலம், துணைத் தலைவர் குமார், இணைசெயலாளர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்டத் தலைவர் திருவேங்கடம் பேசியபோது, காஞ்சிபுரம் வட்டக்கிளை ஆற்றிய சிறப்பான பணிகள், கொரோனா நிதி உதவியாக மாவட்ட சங்கத்துக்கு நன்கொடையாக அளித்ததற்கு பாராட்டு தெரிவித்தார். முடிவில் சங்க இணை செயலாளர் தட்சிணாமூர்த்தி நன்றி தெரிவித்தார்.

Tags : Government Employees Union Executive Committee Meeting , Retired Government Employees Union Executive Committee Meeting
× RELATED ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க செயற்குழுக் கூட்டம்