நிர்வாக காரணங்களுக்காக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் 2 ஆக பிரிப்பு: வைகோ அறிவிப்பு

சென்னை: நிர்வாக காரணங்களுக்காக மதிமுகவில் காஞ்சி, செங்கை ஆகிய மாவட்டங்களை 2 ஆக பிரித்து வைகோ அறிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: மதிமுக நிர்வாக பணிகளுக்காக சில மாவட்டக் கழகங்கள் இரண்டாகவும், சில மாவட்ட கழகங்கள் மூன்றாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் வளையாபதி, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மா.வை.மகேந்திரன், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பார்த்திபன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். மேலும், புதிதாக விவசாய அணிச் செயலாளராக புலவர் க.முருகேசன், தேர்தல் பணிச் செயலாளராக வழக்கறிஞர் ஆவடி ரா.அந்திரிதாஸ், தேர்தல் பணித் துணை செயலாளர்களில் மேலும் ஒருவராக வழக்கறிஞர் ரா.செந்தில்செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>