×

செல்போன் பறித்த வாலிபர் கைது

புழல்: சென்னை எர்ணாவூர், ஆல் இந்தியா ரேடியோ நகரை சேர்ந்தவர் வேணு (60). இவர், செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கத்தில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். வேணு தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர் செல்போனை பறித்துசென்றுவிட்டார். செங்குன்றம் போலீசில் வேணு புகார் அளித்துள்ளார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் அதிகாலையில் வடபெரும்பாக்கம், செட்டிமேடு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போது அவ்வழியே சந்தேகத்துக்கிடமாக வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.  அதில்  சென்னை புளியந்தோப்பை சேர்ந்த சூர்யா (20) என்றும் வேணுவிடம் செல்போன் பறித்தவர் என்றும் தெரிந்தது. இதையடுத்து சூர்யாவை போலீசார் கைது செய்தனர்.


Tags : Youth arrested for stealing cell phone
× RELATED செல்போன் டவரில் ஏறி வாலிபர் திடீர் மிரட்டல்