×

திருவாலங்காடு ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

திருத்தணி:  திருவள்ளுர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றிய கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் ஜீவா விஜயராகவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பா.அருள், எஸ்.சி.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில்  மறைந்த ஒன்றிய கவுன்சிலர்  சுந்தரம்மாள் வெங்கடேசனுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு ஒரு நிமிடம் அனைவரும் மவுனஞ்சலி செலுத்தினர்.

திருவாலங்காடு ஊராட்சி முழுமையும், மிக முக்கியமான மக்கள் கூடுகிற இடங்களிலும், குப்பம் கண்டிகை ஊராட்சியிலும் கண்காணிப்பு கேமரா வைப்பதற்கான தீர்மானமும், தொழுதாவூர், சின்னம்மா பேட்டை, ஜாகீர் மங்கலம், பழையனூர் ஆகிய இடங்களில் உயர் மின்கோபுரம் அமைப்பதற்கான ரூ. 19 லட்சத்து 28 ஆயிரத்து 200 மதிப்பீட்டில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.   மேலும் ஒன்றியத்தில் அடங்கிய அனைத்து ஊராட்சிகளிலும் பொது சுகாதாரம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஒன்றிய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 


Tags : Thiruvalankadu Union Councilors Meeting , Thiruvalankadu Union Councilors Meeting
× RELATED திருவாலங்காடு ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்