×

திருவாலங்காட்டில் திருக்குறளோசை கடிகாரம் திறப்பு

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றிய குழு அலுவலக வளாகத்தில், அண்ணாவின் 112-வது பிறந்த நாளை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் அவரது சிலை திறப்புவிழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு ஒன்றியக் குழு துணை தலைவர் சுஜாதா மகாலிங்கம் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் ஜீவா விஜயராகவன் சிலையை திறந்து வைத்து, இனிப்பு வழங்கினார். இதைத் தொடர்ந்து திருவாலங்காடு பேருந்து நிலையத்தில் திருக்குறளோசை கடிகாரம் துவக்க விழா நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து 2.66 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட இந்த கடிகாரம், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அலாரம் அடிக்கும்போது, ஒரு திருக்குறளை ஒலிப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதை ஒன்றிய குழுத் தலைவர் ஜீவா விஜயராகவன் திறந்து வைத்தார். தமிழை பறைசாற்றுகிற உலக பொதுமறையான திருக்குறளை கடிகாரத்தின் மூலம் புதுமையான முறையில் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கிற வகையில் ஒன்றிய குழுத் தலைவர் ஜீவா விஜயராகவன் முயற்சித்து கட்டி முடித்திருப்பதாக விழாவில் கலந்து கொண்ட அனைவரும் பாராட்டினர்.Tags : Thirukuralosai ,Thiruvalankadu , Inauguration of Thirukuralosai clock at Thiruvalankadu
× RELATED திருவாலங்காட்டில் திருக்குறளோசை கடிகாரம் திறப்பு