சொல்லிட்டாங்க...

ஹத்ராஸ் பகுதிக்கு செல்ல ராகுல்காந்திக்கு எல்லா ஜனநாயக உரிமையும், சுதந்திரமும் உண்டு. இந்த நிலையில் அவரை தாக்கியது ஜனநாயக விதிமீறலாகும். ஜனநாயகத்தை நசுக்கும் செயலாகும். - கேரள முதல்வர் பினராயி விஜயன்.

அன்புக்கு ஏங்கும் பெண் குழந்தைகளிடம் மற்றவர்கள் நாடகத்தனமான அன்பைக் காட்டி வலையில் வீழ்த்தி விடுகின்றனர். இந்த ஆபத்தை தடுக்க ஒரே வழி பெற்றோர் களின் அன்புச் சங்கிலி தான். - பாமக நிறுவனர் ராமதாஸ்

திண்டுக்கல் சீனிவாசனை நான் ரொம்ப மதிக்கிறேன். அவருக்கு கட்சியின் கட்டுப்பாடு நன்றாக தெரியும். செயற்குழு விஷயத்தை வெளியில்  சொல்வது என்பது ஆரோக்கியமல்ல. - அமைச்சர் ஜெயக்குமார்

ராகுல்காந்தியை, பிரதமர் மோடி அரசு மனிதநேயமற்ற முறையில் அவரை பிடித்து கீழே தள்ளி கைது செய்திருக்கிறார்கள். இதை இந்தியா மட்டுமல்ல உலகமே கண்டிக்கிறது. - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

Related Stories:

More
>