ஜனாதிபதி கோவிந்த் 75வது பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து

புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று தனது 75வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.  ;ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த நேற்று 75வது பிறந்த நாளை கொண்டாடினார். உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் உள்ள பாரான்கா கிராமத்தில் அக்டோபர் 1, 1945ம் ஆண்டு அவர் பிறந்தார். அவருக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உ்ள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வெங்கயைா நாயுடு வௌியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘நீங்கள் மிக எளிமையானவர், மற்றவர்களை கனிவுடன் பார்ப்பவர், அனைவரையும் அரவணைத்து செல்லும் சிறந்த முன்மாதிரியான தலைவர். நீங்கள் நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்,’ என கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘உங்களின் உயர்வான தொலைநோக்கு பார்வையும், உங்களுடைய கொள்கை பிடிப்புகளும் நாட்டின் மிகப்பெரிய சொத்தாகும். ஒதுக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதில் மிகவும் இரக்கம் உடைய நீங்கள், பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ, கடவுளிடம் பிராத்தனை செய்கிறேன்,’ என்று கூறியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்கொத்துடன் அனுப்பிய வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது: உங்களின் பிறந்த நாளான இன்று மகிழ்ச்சியான இந்த நேரத்தில் எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீண்ட காலம் உடல் நலத்துடன் நாட்டுக்கு சேவையாற்ற பிரார்த்திக்கிறேன்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இந்த நாட்டிற்கு தொடர்ந்து சேவையாற்ற கடவுளை பிரார்த்திக்கிறேன்.

Related Stories:

>