மோடி பயணம் செய்ய 4,200 கோடியில் அதிநவீன விமானம்: அமெரிக்காவில் இருந்து வந்தது

புதுடெல்லி: இந்திய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பயணம் செய்வதற்காக பி-747 என்ற விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானங்கள், இவர்கள் பயணம் செய்யாத போது வர்த்தக ரீதியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவர்களின் பயணத்துக்காக அதிநவீன பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய தனி விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், அவற்றின் விலை மிக அதிகமாக இருந்ததால், ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பி777 ரக விமானத்தையே பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தி கொடுப்பதற்காக, அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனத்திடம் ரூ.8,400 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஒரு விமானத்தின் விலை ரூ. 4,200 கோடி. அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் ‘ஏர் போர்ஸ் ஒன்’ விமானத்துக்கு இணையான பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த விமானங்கள் மேம்படுத்தப்பட்டு வந்தன. இந்த விமானங்களில்  ஒன்று மட்டும், அமெரிக்காவின் டெக்சாசில் இருந்து புறப்பட்டு  நேற்று டெல்லி வந்து சேர்ந்தது. மற்றொரு விமானமும் விரைவில் ஒப்படைக்கப்படஉள்ளது.

* ஏர் இந்தியா ஒன் விமானத்தில் ஏவுகணை தாக்குதலை தாங்கும், அதை முறியடிக்கும் வசதிகள் உள்ளன.

* தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில், விமானத்தில் பயணம் செய்யும் விவிஐபி.க்களை பாதுகாப்பதற்காக சிறப்பு பாதுகாப்பு அறைகளும் உள்ளன.

* அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த பி777 விமானத்தைத்தான் பயன்படுத்தி வருகிறார்.

* ஏற்கனவே, ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பயன்படுத்தி வரும் ஏர் இந்தியா ஒன் பி747 விமானத்தை விட  பி777 விமானம் அகலமானது.

* தற்போது பயன்படுத்தப்படும் ‘ஏர் இந்தியா ஒன்’ விமானத்தை ஏர் இந்தியா விமானிகள் மட்டுமே இயக்குகின்றனர். இதை, ஏர் இந்தியாவின் தொழில்நுட்பப் பிரிவு பராமரித்து வருகிறது.

* தற்போது வந்துள்ள புதிய விமானத்தை இந்திய விமானப்படை விமானிகள் மட்டுமே இயக்குவார்கள். பராமரிப்புப் பணிகளை மட்டுமே ஏர் இந்தியா நிறுவனம் மேற்கொள்ளும்.

* மணிக்கு 630 மைல் முதல் 700 மைல் வேகத்தில் பறக்கும்.

* ஓரிடத்தில் இருந்து கிளம்பினால் கீழே இறங்காமல், நடுவானிலேயே எரிபொருட்கள் நிரப்பிவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடர முடியும்.

* 45,100 அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது.

Related Stories:

>