×

வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை வர்த்தக காஸ் சிலிண்டர் 26 உயர்வு: 1,276 ஆக நிர்ணயம்

சேலம்: ஓட்டல், டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் வர்த்தக காஸ் சிலிண்டர் 26 உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்துக்கான காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.  சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு காஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. வீடுகளுக்கு 14.2 கிலோ எடையில், ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. கடந்த மாதம் போல் இந்த மாதமும் இந்த சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.

இதன்படி, சென்னையில் மானியமில்லா வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் 610 ஆகவும், சேலத்தில் 628 ஆகவும் நீடிக்கிறது. டெல்லி, மும்பையில் 594 ஆகவும், கொல்கத்தாவில் 620.50 ஆகவும் விலை உள்ளது. ஓட்டல், டீக்கடைகள் போன்றவற்றில் 19 கிலோ எடையுள்ள வர்த்தக காஸ் சிலிண்டர் விலை பயன்படுத்தப்படுகிறது. இந்த சிலிண்பர் நாடு முழுவதும் 25 முதல் 33 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் நடப்பு மாதத்துக்கு 26 உயர்த்தப்பட்டு 1,276 ஆகவும், டெல்லியில் 1,166, மும்பையில் 1,113.50, கொல்கத்தாவில் 1,220, சேலத்தில் 1,237 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags : No change in home cylinder price Commercial Gas Cylinder 26 Rise: Set at 1,276
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...