அக்.15 முதல் நவ.30ம் தேதி வரை 200 கூடுதல் சிறப்பு ரயில்கள்: ரயில்வே வாரிய தலைவர் தகவல்

புதுடெல்லி:  கொரோனா ஊரடங்கை தொடர்ந்து, கடந்த மார்ச் 22ம் ேததியில் இருந்து பயணிகள் ரயில்களை ரயில்வே இயக்கவில்லை. கடந்த மே, ஜூன் மாதங்களிலும் கடந்த 12ம் தேதியும் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில், ரயில்வே வாரிய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி வி.கே.யாதவ் நேற்று கூறுகையில், ‘மண்டல பொது மேலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, கொரோனா பரவல் நிலை குறித்து, உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஆராயுமாறு கூறப்பட்டுள்ளது. அவர்களிடம் அறிக்கை பெற்ற பிறகு, விடுமுறைக்கால ரயில்கள் இயக்குவது பற்றி முடிவு செய்யப்படும். தற்போது, கூடுதலாக 200 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை பின்னர் உயரலாம். பயணிகள் ரயில்களை பொறுத்தவரை, ரயில் தேவைகள் மற்றும் கொரோனா நிலவரங்களை தினசரி ஆய்வு செய்து வருகிறோம். தேவை ஏற்படும்போது ரயில்கள் இயக்கப்படும் என்றார். சரக்கு போக்குவரத்து இணையதளம்: சரக்கு ரயில்கள் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளித்து வரும் ரயில்வே, இதற்கென https://fois.indianrail.gov.in/RailSAHAY/ என்ற தனி இணையதளம் உருவாக்கியுள்ளது. இதில், வாடிக்கையாளர்கள் புகார் செய்யலாம். சரக்கு செல்லும் இடத்தையும் அறிந்து கொள்ளும் வசதி உள்ளது. கடந்த மாதம் ரயில்வே சரக்கு போக்குவரத்து மூலம் 9,896.86 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 13.54 சதவீதம் உயர்வு.

Related Stories: