மீனவ சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மீனவர் நலவாரியம் மூலம் கல்வி கட்டணம்

சென்னை: மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கை: 2017-18ம் ஆண்டில் 8 மாணவர்களுக்கு ரூ.5,85,208 மற்றும் 2018-19ம் ஆண்டில் 8 மாணவர்களுக்கு 4,49,500 மற்றும் 2019-20ம் ஆண்டில் 9 மாணவர்களுக்கு 5,60,125 கல்வி கட்டணமாக செலவிடப்பட்டுள்ளது. தற்போது மீன்வள பல்கலைகழகத்தில் 2020-21ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் மீனவர்களின் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவின் கீழ் இளங்கலை மீன்வள அறிவியல் பிரிவில் 6 இடங்களும், இளங்கலை மீன்வள பொறியியல் பட்டப்படிப்பிற்கு 2 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே மீனவ சமுதாயத்தை சேர்ந்த தகுதியுள்ள மாணவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: