பொது உபயோகத்திற்காக 1,500 ஏக்கர் கையகப்படுத்த கலெக்டர்களுக்கு அதிகாரம்: தமிழக அரசு புது உத்தரவு

நெல்லை: நாடு முழுவதும்  இரு வழி, நான்கு வழிச் சாலைகள் உள்ளிட்ட பொது உபயோகத்துக்கு நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா பிறப்பித்துள்ள புதிய உத்தரவில் கூறியிருப்பதாவது: நிலம் கையகப்படுத்துவதில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் 1894ம் ஆண்டு நில கையகப்படுத்துதல் சட்டத்தை திருத்தி 2014 ஜன.1 முதல் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து பொது உபயோகத்திற்காக நிலம் கையகப்படுத்தும் போது அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் 40 ஏக்கர்கள் வரை கையகப்படுத்தலாம் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இந்த சட்டத்தில் திருத்தம் செய்து  1500 ஏக்கர் (600 ஹெக்டேர்) வரை கலெக்டர்கள் கையகப்படுத்தலாம் என அதிகாரம் அளித்து அரசு ஆணையிடுகிறது. இதற்கான கவர்னர் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: