தேனி மாவட்டம் 2 ஆக பிரிப்பு ராமகிருஷ்ணன், தங்கதமிழ்ச்செல்வன் பொறுப்பாளர்களாக நியமனம்: திமுக பொது செயலாளர் அறிவிப்பு

சென்னை: திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தேனி மாவட்டத்தை திமுக நிர்வாக வசதிக்காக, தேனி வடக்கு மற்றும் தேனி தெற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது. தேனி தெற்கு மாவட்டம் கம்பம், ஆண்டிப்பட்டி; தேனி வடக்கு மாவட்டம் போடிநாயக்கனூர், பெரியகுளம் (தனி) இவ்வாறு சட்டமன்றத் தொகுதிகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. புதியதாக அமையப் பெற்ற தேனி தெற்கு மாவட்டத்திற்கு கம்பம் என். ராமகிருஷ்ணன், தேனி வடக்கு மாவட்டத்திற்கு தங்க.தமிழ்ச்செல்வன் நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: