×

கர்நாடகாவில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ 1,000 அபராதம் விதிக்கப்படும்: மாநில அரசு அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ 1,000/- அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பலவேறு மாநிலங்களில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி , கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் மாநிலங்கள் அதை கட்டுப்படுத்தும் விதமாக மாநில அரசு விதிமுறைகளை கடுமையாக்கி வருகிறது. அதன்படி பொது கர்நாடகாவில் இடங்களில் முகக்கவசம் இல்லாமல் வருபவர்களுக்கு ரூ 1,000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநில மருத்துவ கல்வி அமைச்சர் கே சுதாகர் அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே. சுகாதகர்; மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். சமூக இடைவெளியை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

தற்போது ஒரு நாளைக்கு 90 ஆயிரத்திற்கும் அதிகமாக கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் விரைவில் அவற்றின் எண்ணிக்கை 1 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.


Tags : Karnataka ,places ,State Government , Karnataka fines Rs 1,000 / - for not wearing helmets: State govt
× RELATED கர்நாடகாவில் 16 இடங்களில் ஐடி ரெய்டு