×

குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் மறைவுக்கு அக்.4-ம் துக்கம் அனுசரிப்பு; கொடி அரைக் கம்பத்தில் பறக்கும்: உள்துறை அமைச்சகம்

டெல்லி: குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் மறைவையொட்டி அக்டோபர் 4-ம் தேதி துக்கம் அனுசரிக்கும் வகையில் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 91. அமைதியையும், சமாதானத்தையும் தனது கொள்கையாக கொண்டு ஆட்சி நடத்தியவர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத். இந்த நிலையில் குவைத்தின் புதிய மன்னராக அமீர் ஷேக் சபாவின் ஒன்றுவிட்ட சகோதரரும், பட்டத்து இளவரசருமான ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் சபா பொறுப்பேற்றுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த விழாவில் எம்.பி.க்களின் கரவொலிகளுக்கு மத்தியில் ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் சபா குவைத்தின் புதிய மன்னராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில், குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் மறைவையொட்டி, இந்தியாவில் அக்டோபர் 4-ம்தேதி 1 நாள் துக்கம் அனுசரிக்கும் வகையில் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Amir Sheikh Sabah Al-Ahmad ,death ,Kuwaiti ,Ministry of the Interior , King of Kuwait, Amir Sheikh Sabah Al-Ahmad .Maraivu, Ministry of the Interior
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...