உ.பி. பலாத்காரம் குறித்து வாய் திறக்காத ஸ்மிருதி இராணி; நிர்பயா சம்பவத்தில் வீதியில் இறங்கி போராடியவர் எங்கே?... டிவிட்டரில் காங்கிரஸ் விமர்சனம்

டெல்லி: உத்திரப்பிரதேசத்தில் பட்டியலின இளம்பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் இதுவரை கருத்து கூறாத மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஸ்மிருதி இராணியின் இந்த மவுனத்தை சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட போது வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியவர்தான் தற்போதையை அமைச்சர் ஸ்மிருதி இராணி.

ஆனால் உத்திரப்பிரதேசத்தில் நடந்துள்ள கூட்டு பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை சம்பவத்தில் ஸ்மிருதி இராணியின் கோவம் எங்கே போனது? என்று மகளிர் காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்மிருதி வீதியில் இறங்கி போராட்டம் நடத்திய வீடியோ பதிவையும், காங். கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. ஸ்மிருதி இராணி ஒரு நாடக அரசி என்று காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. வரலாற்றில் மிகவும் மோசமான அமைச்சர் ஸ்மிருதி இராணி என்று மகளிர் காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் குறிப்பிட்டுள்ளார்.

இவரை போலவே பலரும் சமூக வலைதளங்களில் அமைச்சர்  ஸ்மிருதி இராணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Related Stories: