அமெரிக்கன் ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் 1,600 பைலட்கள் உட்பட 32 ஆயிரம் ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் இரண்டு பெரிய விமான சேவை நிறுவனங்களான அமெரிக்கன் ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் 1,600 பைலட்கள் உட்பட 32 ஆயிரம் ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்பும் நடவடிக்கையைத் துவக்கியுள்ளன. கொரோனா வைரஸ் காலக்கட்டத்தில் பல நிறுவனங்கள் செயல்பட முடியாமல் உள்ளன. இதுபோன்ற சிக்கலைச் சந்தித்துள்ள அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்க அரசின் நிவாரணத் தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இதுவரை ஆட்குறைப்பில் ஈடுபடாமல் இருந்தன. தற்போது நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவை இழந்துள்ளதால், தங்களது ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்பத் துவங்கியுள்ளன. சில நிறுவனங்கள், மீண்டும் பணியில் அமர்த்தும் வாய்ப்பு உள்ளதாக ஊழியர்களுக்கு அளித்துள்ள மெமோவில் தெரிவித்துள்ளன.

தற்போது அமெரிக்காவின் இரண்டு பெரிய விமான சேவை நிறுவனங்களான அமெரிக்கன் ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள், 1,600 பைலட்கள் உட்பட 32 ஆயிரம் ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்பும் நடவடிக்கையைத் துவக்கியுள்ளன. சுமார் 13 சதவீத பணியாளர்கள் இதன் மூலம் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. மேலும், டெல்டா ஏர்லைன்ஸ், சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்சிலும் 10 ஆயிரக் கணக்கான ஊழியர்கள் வேலை விடுவிப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர். நாளை காலை எழுந்திருக்கும் போது பல 30 ஆயிரத்துக்கும் அதிமான ஊழியர்களுக்கு வேலையிருக்காது என அமெரிக்க விமான ஊழியர்கள் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

Related Stories:

>