×

இந்தச் செடியின் விலை ரூ.4 லட்சம்!

நன்றி குங்குமம்

உங்கள் கையில் நான்கு லட்ச ரூபாய் இருந்தால் என்ன செய்வீர்கள்? கார் அல்லது விலைஉயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். ஆனால், நியூசிலாந்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் வீட்டில் வளர்க்கும் ஒரு செடியை வாங்கி வைரலாகிவிட்டார். அந்தச் செடியின் பெயர் வரிகேட்டட் மினிமா. இது ஒரு அரிய வகை தாவரம். நான்கு இலைகள் மட்டுமே இருக்கும் இந்தக் குட்டிச் செடி மெதுவாகத்தான் வளரும். குளிர்ந்த சூழலை வெதுவெதுப்பாக மாற்றும் ஆற்றல் வாய்ந்தது. இதன் தோற்றம் ரொம்பவே ஸ்பெஷல்.

ரோல்ஸ் ராய்ஸ், லம்போர்கினி கார்களைப் போல அந்தஸ்தின் அடையாளமாக இந்தச் செடி மேல் நாட்டினரால் பார்க்கப்படுகிறது. ஆன்லைனில் 8,150 நியூசிலாந்து டாலர்கள் கொடுத்து இச்செடியை வாங்கியிருக்கிறார் அந்த இளைஞர். இந்திய மதிப்பில் சுமார் 4 லட்ச ரூபாய். அவர் புதிதாக தொடங்கப்போகும் உணவகத்தை அலங்கரிக்கப் போகிறது வரிகேட்டட் மினிமா.

தொகுப்பு: த.சக்திவேல்

Tags : plant , The price of this plant is Rs. 4 lakhs!
× RELATED விலையை கேட்டாலே கண்ணீர் வருது......