×

30 ஆண்டுகள்...3 கிமீ... ஒரு கால்வாய்... தனி ஒருவன்!

நன்றி குங்குமம்

பீகாரில் கோதிலாவா என்ற குக்கிராமத்தில் மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் ஒன்றை அமைத்து வைரலாகிவிட்டார் லாங்கி பூயன். பல வருடங்களுக்கு முன்பு கால்நடைகளை மேய்ப்பதற்காக மலைக்குச் சென்றிருக்கிறார். அப்போது கடுமையான மழை. மலையில் இருந்து வழிந்தோடும் மழைநீர், நதியில் கலப்பதைப் பார்த்த பூயனுக்குப் பொறி தட்டியிருக்கிறது. அந்த மழைநீரை கால்வாய் வெட்டி நம்ம கிராமத்துக்குக் கொண்டு வரலாம் என அன்றைய இரவு முழுவதும் தூங்காமல் யோசித்திருக்கிறார். அடுத்த நாளே கால்வாய் வெட்ட மண்வெட்டியுடன் மலைக்குக் கிளம்பிவிட்டார்.

அவரது செயலை வேடிக்கை பார்த்ததோடு மட்டுமல்லாமல் வெட்டி வேலை என்று விமர்சனம் செய்தனர் ஊர்மக்கள். எதையும் பொருட்படுத்தாமல் தனி ஒருவனாக கால்வாயை வெட்டியிருக்கிறார் பூயன். அதுவும் முப்பது ஆண்டுகளாக. இப்போது மலையில் பெய்யும் மழை நீர் பூயன் வெட்டிய கால்வாய்வழியாக கோதிலாவா கிராமத்தின் குளத்தை நிரப்புகிறது.

தொகுப்பு: த.சக்திவேல்


Tags : canal ,individual , 30 years ... 3 km ... a canal ... an individual!
× RELATED கால்வாய் சீரமைக்க கோரிக்கை முன்னாள் படை வீரருக்கு பணி வாய்ப்பு