×

சாலை வரியை ரத்து செய்தால் ஆம்னி பேருந்துகளை இயக்க நாங்கள் தயார்: கோரிக்கையை பரிசீலிக்குமா தமிழக அரசு?

சென்னை: சாலை வரியை ரத்து செய்தால் மட்டுமே தனியார் ஆம்னி பேருந்துகளை இயக்க முடியும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 6 மாதமாக தனியார் ஆம்னி பேருந்துகளை இயக்கபடாமல் உள்ளது. அரசு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், தனியார் ஆம்னி பேருந்துகளை இயக்க சாலை வரியாக 2 லட்ச ரூபாய் வரை செலுத்த வேண்டி உள்ளது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் வருவாய் இல்லாத நிலையில் சாலை வரியை கட்ட முடியாத சூழல் உள்ளதாகவும், இதன் காரணமாக இத்தொழிலை நம்பி இருக்கும் சுமார் 2 லட்சம் பேர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர் எனவும் கூறியுள்ளது. எனவே இந்தாண்டின் இரண்டு காலண்டிற்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே அரசு எங்கள் கோரிக்கையை ஏற்றால் மட்டுமே ஆம்பி பேருந்துக்களை இயக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களாக தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவில்லை என தெரிவித்தார். இதனால், எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என கூறினார். எனவே, கொரோனா ஊரடங்கு காலத்தை கணக்கிட்டு 6 மாதங்களுக்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருவதாக கூறினார்.

அரசிடம் ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கை:

* ஆம்னி பேருந்துகளில் 100 சதவீதம் பயணிகளுடன் இயக்க அனுமதிக்க வேண்டும்.
* ஏசி வசதியுள்ள பேருந்துகளை இயக்கவும் அனுமதிக்க வேண்டும்.
* சாலை வரியை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு பல கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தி வருகிறோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அ.அன்பழகன் கூறினார். ஆனால், தமிழக அரசு எங்கள் கோரிக்கைகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறினார். இருப்பினும், கொரோனா பேரிடர் காலத்தில் 6 மாதங்களுக்கான சாலை வரியை ரத்து செய்தால் ஆம்னி பேருந்துகளை உடனடியாக இயக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என கூறினார்.


Tags : Omni ,government ,Tamil Nadu , Road line, cancellation, Omni bus, run, ready
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி