×

தேசிய தன்னார்வ ரத்த தான நாள்: தமிழ்நாட்டில் 310 உரிமம் பெற்ற ரத்த வங்கிகள் உள்ளன: இதுவரை 9,20,297 யூனிட் ரத்தம் சேகரிப்பு.!!!

சென்னை:  விலைமதிப்பற்ற மனித உயிர்களை காப்பாற்றும் இரத்த தானத்தின் அவசியம் குறித்தும், இரத்த தானம் செய்வது குறித்த  விழிப்புணர்வை மக்களிடையே எற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ  ரத்த தான நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தேசிய தன்னார்வ ரத்த தான நாளின் கருப்பொருள் “தன்னார்வ ரத்த  தானம் செய்து, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு பங்களிப்போம்”என்பதாகும். தன்னார்வ ரத்த கொடையாளர்கள் மூலம் ரத்தத்தை சேகரிப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி  வருகிறது.

இந்நிலையில், 2019-ம் ஆண்டு கணக்கின்படி, தமிழ்நாட்டில் 310 உரிமம் பெற்ற ரத்த வங்கிகள் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இந்தியாவில்  மொத்தம் 3 ஆயிரத்து 321 ரத்த வங்கிகள் உள்ளன. அதிகப்பட்சமாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் 348 ரத்த வங்கிகள் செயல்படுகிறது.  தமிழகத்தில் 310 ரத்த வங்கிகள் மூலம் 9 லட்சத்து 20 ஆயிரத்து 297 யூனிட் ரத்தம் பெற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கோவிட் - 19 காலக்கட்டங்களில் தொடர் தன்னார்வரத்த கொடையாளர்கள், செஞ்சுருள் சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கோவிட் - 19 தன்னார்வலர்களிடமிருந்து 1,77,500 அலகுகள் ரத்தம் சேகரிக்கப்பட்டு, 1,74,000 அலகுகள் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.  நடப்பாண்டில் தன்னார்வரத்த தானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கினை எய்திட மக்கள் அனைவரும் இரத்த  தானம் செய்திட ஆர்வத்துடன் முன்வர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : blood banks ,Tamil Nadu ,units , National Voluntary Blood Donation Day: There are 310 licensed blood banks in Tamil Nadu: 9,20,297 units of blood collected so far !!!
× RELATED தமிழ்நாட்டின் உச்சபட்ச மின்நுகர்வு நேற்று பதிவு..!!