உ.பி.யில் மீண்டும் கொடூரம்: கூட்டு பாலியல் பலாத்காரத்தால் கொடூரமாக பலியான மற்றொரு இளம்பெண்...அதிர்ச்சியில் பெற்றோர்கள்.!!!

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மேலும் ஒரு பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 19 வயது  இளம்பெண், கடந்த 14-ம் தேதி தனது தாயுடன் சென்ற போது, உயர் வகுப்பை சேர்ந்த 4 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பிறகு உடலில் பலத்த காயங்களுடன், நாக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் கந்தல் கோலத்தில்  கண்டெடுக்கப்பட்டார். அந்த பெண் அலிகாரில் உள்ள ஜேஎன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்பு, முதுகெலும்பு மிகவும் பாதிக்கப்பட்டதால் கடந்த 28-ம் தேதி டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இளம்பெண்ணின் மரணத்துக்கு நீதி  கேட்டு நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இப்பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சித்தலைவர்கள், பெண்கள் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மற்றொரு பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் பால்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது பட்டியலினப் பெண் ஒருவர்,  கடந்த 29-ம் தேதி வழக்கம் போல் பணிக்குச் சென்றுள்ளார். ஆனால் அவர் அன்று வீடு திரும்ப வில்லை. மாறாக அடுத்த நாள் நேற்று 30-ம் தேதி இரவு கையில் குளுக்கோஸ் ஊசியுடன் உடல் நிலை மோசன நிலையில், வீடு திரும்பினார்.  இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அப்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

விசாரணையில் அவர் இரண்டு நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், இரண்டு நபர்களை காவலர்கள் கைது  செய்துள்ளனர். நேற்று முன்தினம் நடந்த சம்பவம் இன்னும் ஒயாத நிலையில், மீண்டும் ஒரு பெண் கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையிர், உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்கொடுமைகளுக்கு முதல்வர் யோகி ஆதித்ய நாத் முற்றுப்புள்ளி வைப்பாரா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Stories: