×

உ.பி.யில் மீண்டும் ஒரு கொடூரம்.. : 22 வயது இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை :சிறுவன் உள்பட 2 பேர் கைது

லக்னோ : ஹத்ராஸ் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் உத்தர பிரதேசத்தில் மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. பல்ராம்பூர் அருகே வேலைக்குச் சென்ற 22 வயது இளம்பெண்ணை ஒரு கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அத்துடன் அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கி உள்ளனர். பலத்த காயமடைந்த அந்த பெண்ணை லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரு சிறுவன் உள்பட 2 பேரை கைது செய்தனர்.Tags : girl gang ,death , UP, cruelty, teenager, gang rape, murder
× RELATED உபி.யில் தொடரும் அட்டூழியம் 15 வயது...