உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 77.18 லட்சம் பேருக்கு சிகிச்சை.. 66,036 பேர் கவலைக்கிடம்!!

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 41 லட்சத்தை கடந்தது.சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 41 லட்சமாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 41 லட்சத்து 46 ஆயிரத்து 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 77 லட்சத்து 18 ஆயிரத்து 271 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்து 36 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 54 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது . ஆனாலும், கொரோனாவால் இதுவரை 10 லட்சத்து 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 74,46,835

இந்தியா - 62,25,764

பிரேசில் - 48,13,586

ரஷியா - 11,76,286

கொலம்பியா - 8,29,679

பெரு - 8,14,829

ஸ்பெயின் - 7,69,188

அர்ஜெண்டினா - 7,51,001

மெக்சிகோ - 7,38,163

தென் ஆப்பிரிக்கா - 6,74,339

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 2,11,713

பிரேசில் - 1,43,962

இந்தியா - 97,497

மெக்சிகோ - 77,163

இங்கிலாந்து - 42,143

இத்தாலி - 35,894

பெரு - 32,463

பிரான்ஸ் - 31,956

ஸ்பெயின் - 31,791

ஈரான் - 25,169

கொலம்பியா - 25,998

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

இந்தியா - 51,87,826

அமெரிக்கா - 46,88,907

பிரேசில் - 41,80,376

ரஷியா - 9,58,257

கொலம்பியா - 7,43,653

பெரு - 6,83,815

தென் ஆப்ரிக்கா - 6,08,112

Related Stories: