×

போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நண்டு நர்மதா மீது வழக்கு பதிவு

அண்ணாநகர்: சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் நர்மதா. இவர், பல தன்னிச்சையான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். சமீபகாலமாக அமைச்சர் வீட்டு முன்பு நண்டு விட்டு ஆர்ப்பாட்டம் செய்ததால் அவரை போலீசார் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர். இந்நிலையில், பாஜ மாநில தலைவர் முருகன் வீட்டு முன்பு பாஜ கொடியை தூக்கில் தொங்கவிட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். நேற்று காலை 11 மணி அளவில் அண்ணா நகர் காவல் நிலையம் முன்பு போலீசாரை கண்டித்து அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், அண்ணாநகர் காவல் நிலையம் முன்பு போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நண்டு நர்மதா மீது போலீசார் திடீரென வழக்கு பதிவு செய்தனர்.

Tags : Narmada , Protesting against the police to register a case against the Narmada crab
× RELATED போலீசாரை தாக்கிய வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது