×

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி: 400 கிமீ இலக்கை தகர்க்கும்

* தரை, கப்பல், போர் விமானம் என எல்லா தளங்களில் இருந்தும் ஏவ முடியும்.
* இந்திய - ரஷ்ய விஞ்ஞானிகள் இணைந்து, புதிய பிரமோஸ் ஏவுகணையை வடிவமைத்து உள்ளனர்.
* உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், இந்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே இது தயாரிக்கப்பட்டுள்ளது.
* ஒலியின் வேகத்தை விட 2.8 மேக் என்கிற அதிவேகத்தில் பாயந்து செல்லும்.
* 400 கிமீ தாண்டியுள்ள இலக்கையும் தவறாமல் தகர்க்கும்.

பாலசோர்: கடந்த 2017, 2019ம் ஆண்டுகளில் இந்திய - ரஷ்ய கூட்டு ஒப்பந்தத்தில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள், இந்திய ராணுவத்தில் ஏற்கனவே இடம் பெற்றுள்ளன. அவற்றின் தொழில்நுட்பங்கள் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு, தற்போது புதிய பிரமோஸ் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கி இருக்கிறது. நேற்று காலை இது, பாலசோர் கடற்கரையில் இருந்து வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது. ஒலியின் வேகத்தைவிட மூன்று மடங்கு அதிகமான வேகத்தில் பாய்ந்த இது, இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.

Tags : Promos missile test success: 400 km target smashes
× RELATED இடைக்கால ஜாமின் பெற்ற கெஜ்ரிவால்...