திருவள்ளுர் நகர திமுக சார்பில் இணையதள உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவள்ளுர்: திருவள்ளுர் நகர திமுக சார்பில் 15 மற்றும் 17 வது வார்டுகளில் எல்லோரும் நம்முடன் இணையதள உறுப்பினர் சேர்க்கை முகாம் நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. வார்டு செயலாளர் ஜெ.சேகர், வார்டு செயலாளரும், மாவட்ட பிரிதிநிதியும், ஆதிதிராவிடர் மாவட்ட அமைப்பாளருமான ஜெ.சங்கர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் டி.கே.பாபு, எஸ்.பஸ்கர் ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் உறுப்பினர் சேர்ப்பு முகாமை தொடங்கி வைத்தனர். இதில் மாவட்ட துணை செயலாளர் மாவட்ட துணை செயலாளர் நடுக்குத்தகை ரமேஷ், ஒன்றிய செயலாளர் எஸ்.மாகலிங்கம், வணங்காமுடி,  நகர நிர்வாகிகள் து.தேவன், ராஜேஸ்வரி கைலாசம், இ.குப்பன், கு.ரவிச்சந்திரன், வே.ரமேஷ்பாபு, புட்லுர் எஸ்.குணசேகரன், ராயல் பாஸ்கரன், மகாலிங்கம், முனுசாமி, காளிதாஸ், ராமதாஸ், சாந்தகுமார், மாவட்ட கவுன்சிலர் விஜயகுமாரி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>