போலீசார் முன்னிலையில் திருந்தி வாழ்வதாக 107 குற்றவாளிகள் உறுதிமொழி

திருவள்ளூர்: காஞ்சிபுரம் சரக காவல்துறை துணை தலைவர் சாமுண்டீஸ்வரி உத்தரவின் பேரில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் மேற்பார்வையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் முத்துக்குமார், மீனாட்சி ஆகியோர் தலைமையில், திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருபவர்களை கண்டுபிடித்து அவர்கள் நன்னடத்தையுடன் செயல்பட நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன்படி திருந்தி வாழ்ந்து வரும் 107 குற்றவாளிகளை திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு வரவழைத்து அறிவுரை வழங்கப்பட்டது. அதன்பிறகு இனிவரும் காலங்களில் எவ்வித குற்ற செயல்களிலும் ஈடுபடமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இருப்பினும் இவர்களுடைய நடவடிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார். டிஎஸ்பிக்கள் துரைப்பாண்டியன், சாரதி, ரமேஷ், கல்பனாதத், குணசேகரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.

Related Stories: