பட்டரை பெரும்புதூர் ஏரிக்கரையில் பனை விதைகள் நடும் பணி: கலெக்டர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர்: பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை சார்பில், திருவள்ளூர் மாவட்டம், பட்டரைபெரும்புதூர் ஏரியில் கரையோரங்களில் பனை விதை நடும் பணி தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பனை விதை நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், “குடிமராமத்து பணி என்பது மக்கள் தங்கள் உழைப்பு மற்றும் பொருள் பங்களிப்பு மூலம் நீர் ஆதாரங்களை சீர் செய்து நிர்வகித்தல் ஆகும். தமிழ்நாட்டில் நீர் நிலைகளை புனரமைக்க அந்தந்த பாசன அமைப்பின் விவசாயிகளால் கூட்டாக குடி மராமத்து என்ற பெயரில் சீரமைப்பு பணி செய்து நீர்மேலாண்மை சிறப்பாகவும் செம்மையாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரூ.3 ஆயிரத்து 259.34 லட்சம் மதிப்பீட்டில் 80 ஏரிகளில் விவசாய சங்கங்கள் பனை விதை நடப்படுகிறது. ஏரியின் எல்லை பகுதிகளில் சமூக பணிக்குழு அறக்கட்டளை மூலம் பனை விதைகள் நட உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 500 பனை விதைகள் பட்டரை பெரும்புதூர் ஏரியில் ஓரத்தில் நடப்பட உள்ளது” என்றார். இதில், கொசஸ்தலையாறு வடிநிலகோட்ட செயற்பொறியாளர் பொதுப்பணித்திலகம், உதவி செயற்பொறியாளர்கள் கார்த்திகேயன், ரமேஷ், சதீஷ்குமார் கலந்துகொண்டனர்.

Related Stories: