அசர்பெய்ஜான் - ஆர்மீனியா இடையே 3-வது நாளாக சண்டை!..நாகர்னோ கராபாக் பகுதி யாருக்குச் சொந்தம் என்பதில் கடும் மோதல்!

ஆர்மீனியா:  முன்னாள் சோவியத் நாடுகளான அசர்பெய்ஜான் - ஆர்மீனியா இடையே 3வது நாளாக நீடிக்கும் யுத்தத்தில் இருதரப்பிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஞயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த போரானது தற்போது வரை நீடித்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக மலைகள் சூழ்ந்த பகுதியான நாகர்னோ கராபாக் பகுதி யாருக்குச் சொந்தம் என்பதில் நீடிக்கும் பிரச்சனை முழு அளவிலான போராக தற்போது வெடித்துள்ளது. சர்சைக்குரிய பிராந்தியத்தின் எல்லை நெடுகிலும் இருதரப்பினருக்கும் இடையே மோதல் தொடர்கிறது.

அசர்பெய்ஜான் மற்றும் ஆர்மீனியா வீரர்கள் ஒருவருக்கொருவர் எதிரான நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்களின் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளன. அசர்பெய்ஜான் இராணுவத்தின் 137 கவச வாகனங்கள், 72 ட்ரோன்களை அழித்துவிட்டதாகவும், அந்நாட்டு இராணுவ வீரர்கள் 790 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் ஆர்மீனியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தங்களுக்கு சொந்தமான போர் விமானத்தை துருக்கி இராணுவம் சுட்டு வீழ்த்திவிட்டதாகவும் ஆர்மீனியா குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து அப்பகுதி முழுவதும் கலவர பூமியாக மாறியுள்ளது. இதனிடையே அசர்பெய்ஜான் - ஆர்மீனியா ஆகிய இரு நாடுகளையும் கண்டித்துள்ள ஐ.நா சபை உடனடியாக போர் நிறுத்தம் செய்து பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Stories:

>