கொரோனா ஊரடங்கு காலத்தில் 68 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை முதன்மை மாவட்ட நீதிபதி முத்து சாரதா தொடங்கி வைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி மாரியப்பன் வரவேற்றார். நீதிபதி முத்துசாரதா பேசுகையில், ‘கொரோனா ஊரடங்கு காலத்தில் 68 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குழந்தை திருமணங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாகன பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது’ என பேசினார்.

நிகழ்ச்சியில் நீதிபதிகள் சுமதி சாய்பிரியா, பரிமளா, காஞ்சனா, ஸ்ரீதரன், சுந்தரி, சிவாராஜேஷ், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆனந்தி, விரைவு நீதிமன்ற குற்றவியல் நீதித்துறை நடுவர் சந்திரகாசபூபதி, நீதித்துறை நடுவர் பரம்வீர், காவல்துறை அதிகாரிகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் கணேசன், குழந்தைகள் திருமணம் தடுத்தல் சமூக நலத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கல்வாரி தியாகராஜன் வாழ்த்துரை வழங்கினர். தலைமை குற்றவியல் நீதிபதி கதிரவன் நன்றி தெரிவித்தார்.

Related Stories: