போடி: குடும்ப பிரச்னையை தீர்த்து வைக்கக்கோரி, போடி காவல்நிலையத்தில், குடும்பத்தோடு வந்து தற்கொலை மிரட்டல் விடுத்த ‘குடிமகனுக்கு’ போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். தேனி மாவட்டம், போடி முனிசிபல் காலனியைச் சேர்ந்தவர் முனியாண்டி (34). நகராட்சி தற்காலிக தூய்மைப்பணியாளர். இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். மது அருந்தும் பழக்கமுள்ள முனியாண்டியால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. நேற்று போதையில் இருந்த முனியாண்டி தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு, மண்ணெண்ணெய் கேனுடன் போடி காவல்நிலையத்துக்கு வந்தார்.