பெரம்பலூர் மாவட்டத்தில் கடும் உரத்தட்டுப்பாடு.: பயிர்களுக்கு மேலுரமிட முடியமால் விவசாயிகள் தவிப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கடும் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வளர்ச்சி பருவ பயிர்களுக்கு மேலுரமிட முடியமால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேளாண் கூட்டுறவு மையங்களில் போதிய அளவுக்கு யூரியா இருப்பு இல்லை என்பது விவசாயிகளின் புகாராகும்.

இதனால் தனியாரிடம் அதிக விலை கொடுத்து யூரியா வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை பயன்படுத்தி யூரியா உரத்தை பதுக்கி வைத்து தனியார் உர விற்பனையாளர்கள் இருமடங்காக விலை வைத்து விற்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு இயல்பை விட கூடுதலாக தென்மேற்கு பருவ மழை பெய்துள்ளதால், மானாவாரியாக சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளம் மற்றும் பருத்தி உள்ளிட்ட பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளது. ஆனால் போதிய உரம் கிடைக்காததால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். தமிழக அரசு வேளாண் வங்கிகள் மூலம் வழங்கும் யூரியாவை அதிகப்படுத்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்.

Related Stories: