×

ஒரு நாளைக்கு 87 பலாத்காரம் ; பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7% அதிகரிப்பு ... இந்தியாவின் கோர முகம்!!

டெல்லி : தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் வெளியிட்டுள்ள இந்தியாவில் குற்றங்கள் -2019 அறிக்கையில்  கடந்த ஆண்டைவிட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 87 பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையின் மூலம் கடந்த 2019ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான  4,05,861 குற்றங்கள் பதிவாகியுள்ளன என்றும் இது 2018ம் ஆண்டைவிட  ஏழு சதவீதத்திற்கும் மேலானது என்பதும் தெரியவந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.சி.ஆர்.பி., நாடு முழுவதும் இருந்து குற்றத் தரவுகளை சேகரித்து ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. 36 மாநிலங்கள் மற்றும் யூ.டி.க்கள் மற்றும் 53 பெருநகரங்களில் இருந்து தரவுகளை சேகரித்த பின்னர் மூன்று தொகுதி அறிக்கையை நிறுவனம் தொகுத்துள்ளது.

தேசிய குற்றப் பதிவுகள் பணியக அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2018ம் ஆண்டில் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 3,78,236 பதிவாகியுள்ளன.2018ம் ஆண்டில், நாடு முழுவதும் 33,356 கற்பழிப்புகள் பதிவாகியுள்ளன, இது 2017ம் ஆண்டில் 32,559 ஆக இருந்தது. 2019ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 4,05,861 குற்றங்கள் பதிவாகியுள்ளன. ஒரு லட்சம் பெண்கள் மக்கள் தொகையில் பதிவு செய்யப்பட்ட குற்ற விகிதம் 2019ம் ஆண்டில் 62.4 சதவீதமாக உள்ளது, இது 2018ம் ஆண்டின் 58.8 சதவீதத்திலிருந்து அதிகரித்துள்ளது. பெண்கள் மட்டுமல்ல, குழந் தைகளுக்கு எதிரான குற்றங்களுடன் தொடர்புடைய வழக்குகளும் அதிகரித்து உள்ளன. 2018 ஆண்டடைவிட 2019ம் ஆண்டில்  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 4.5 சதவீதம் அதிகரித்துள்ளன.2019ம் ஆண்டில் குழந்தைகள் மீதான குற்றங்கள் மொத்தம் 1.48 லட்சம்  பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 46.6 சதவீதம் கடத்தல் வழக்குகள் மற்றும் 35.3 சதவீத வழக்குகள் பாலியல் குற்றங்கள் தொடர்பானவை. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குகளில் பெரும்பாலானவை கணவர் அல்லது அவரது உறவினர்களால் கொடுமை (30.9 சதவீதம்), பெண்கள் மீதான தாக்குதல் (21.8 சதவீதம்), பெண்கள் கடத்தல் (17.9 சதவீதம்), ” என்சிஆர்பி தரவு காட்டுகிறது,

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : rapes ,women ,India , Sexual Violence, Women, Crimes, India
× RELATED பாஜக ஆட்சி ஒன்றியத்தில் அமையாமல்...