பீகார் சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டில் அதிருப்தி.: இன்று முக்கிய முடிவை எடுக்கிறது லோக் ஜனசக்தி

பீகார்: பீகார் சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால் தே.ஐ. கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து லோக் ஜனசக்தி கட்சி இன்று முடிவு செய்ய உள்ளது. லோக் ஜனசக்தி கட்சிக்கு 22 முதல் 25 இடங்களை வழங்க பாஜக கட்சி தயாராக உள்ளது. ஆனால் ஏற்கனவே 143 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை  லோக் ஜனசக்தி கட்சி தேர்வு செய்து விட்டதாக தகவல் தெரிவிக்கிறது.

பீகார் சட்டமன்ற தேர்தலை தனித்து சந்திக்கும் முடிவுடன் அக்கட்சி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தே.ஐ.கூட்டணியில் இருந்து வெளியேறுவதா அல்லது தொடர்வதா என்று லோக் ஜனசக்தி கட்சி இன்று முடிவு செய்து அறிவிக்க உள்ளது. பாஜக மற்றும் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே தொகுதி பங்கீடுகள் இன்னும் முடிவு ஆகாததால் இழுபறி நீடிக்கிறது.

பாஜக-கான எதிரான மெகா கூட்டணியிலும் தொகுதி பங்கீட்டில் உடன்பாடுகள் எட்டப்படவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு 58 இடங்களையும், இடதுசாரிகளுக்கு 25 தர லாலு பிரசாத் கட்சி ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி முடிவு செய்துள்ளது. ஆனால் 80 இடங்களை எதிர்பார்த்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு இந்த முடிவு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு அக்.28, நவ.3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மூன்று தேதிகளிலும் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் நவ.10 தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Related Stories: