×

தினசரி 70-80 ஆயிரம் பேருக்கு கொரோனா.. இந்தியாவில் 9.40 லட்சம் பேருக்கு சிகிச்சை : இதுவரை 97,297 பேர் பலி; 51.97 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 62 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 97 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி  நேரத்தில், நாட்டில் கொரோனாவால்  புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக  80,472 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62,25,764 ஆக உயர்ந்தது.
* புதிதாக 1,179 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 97,497 ஆக உயர்ந்தது.

.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 86,428 பேர் குணமடைந்துள்ளனர்;
.* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 51,87,826 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,40,441 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 83.33% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.57% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 15.11% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 10,86,688 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
* இதுவரை 7,41,96,729 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!
    
மகாராஷ்டிரா : சிகிச்சை பெறுவோர் :260789; குணமடைந்தோர் :  1069159; இறப்பு : 36181

தமிழகம் : சிகிச்சை பெறுவோர் : 46281; குணமடைந்தோர் :  536209 ; இறப்பு : 9453
    
டெல்லி : சிகிச்சை பெறுவோர் : 27524 ; குணமடைந்தோர் :  243481 ; இறப்பு :   5320

கேரளா : சிகிச்சை பெறுவோர் :61869 ; குணமடைந்தோர் : 124688 ; இறப்பு :  719

கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் :    107756; குணமடைந்தோர் : 476378 ; இறப்பு :  8777
    
ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் :59435; குணமடைந்தோர் :  622136 ; இறப்பு : 5780

Tags : Corona ,India ,home , India, Corona, Number, Rise
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...