ஐபிஎல் 2020: டி20 போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

துபாய்: ஐபிஎல் 2020 டி20 போட்டியில் டெல்லி அணிக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக ஐதராபாத் அணி நிர்ணயித்துள்ளது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியிடம் தோல்வியை தழுவியது.

Related Stories: