×

மியான்மரில் 15 நாட்களுக்கு முன் 9 தமிழக மீனவர்கள் மீட்பு..!! - தமிழகம் அழைத்து வருவதில் தாமதம் காட்டுவதாக உறவினர்கள் குற்றச்சாட்டு!!!

சென்னை:  மோசமான வானிலை காரணமாக மியான்மரில் மீட்கப்பட்ட தமிழக மீனவர்களை சென்னைக்கு அழைத்து வருவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 22ம் தேதி ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்று காணாமல் போன 9 மீனவர்கள் கடந்த 14ம் தேதி மியான்மர் நாட்டில் மீட்கப்பட்டனர். அவர்களை தமிழகம் அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் அங்குள்ள விசைப்படகை கட்டுவதற்கு கடலில் இறங்கிய பாபு என்ற மீனவரை காணவில்லை. ஒரு வாரமாக அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

 இந்த நிலையில் எஞ்சிய 8 மீனவர்களை தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா காரணமாக விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சிறப்பு விமானம் மூலம் மீனவர்களை இன்று அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் மியான்மரில் வானிலை மோசமாக இருப்பதால் தமிழகத்திற்கு மீனவர்களை அழைத்து வருவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதற்கிடையில் அடுத்த மாதம் 7ம் தேதி டெல்லி வழியாக 8 மீனவர்களும் சென்னை அழைத்துவரப்பட இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags : fishermen ,Tamil Nadu ,Myanmar ,Relatives , 9 Tamil Nadu fishermen rescued 15 days ago in Myanmar .. !! - Relatives accuse of delay in bringing Tamil Nadu !!!
× RELATED இலங்கை சிறையிலிருந்து...